Skip to the text
பெரிய திருமொழி

3-3. வாட மருதிடை

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

மருத மரங்களை முறித்து, மல்லரைக் கொன்று, ஆயர் ஆநிரைக்காக நின்ற கண்ணனின் செயல்களை வரிசைப்படுத்தும் பதிகம். ஒவ்வொரு செயலும் யாரையாவது காப்பதற்காகவே நிகழ்ந்தது என்பதை ஆழ்வார் சுட்டுகிறார். வலிமையின் காட்சிகள் அனைத்தும் இறுதியில் கருணையின் கதைகளாகவே முடிகின்றன.

பெரிய திருமொழி 3-3 - வாட மருதிடை (திருச்சித்திரகூடம்‌ 2)

1168

வாட மருதிடை போகி மல்லரைக்‌ கொன்று ஒக்கலித்திட்டு ஆடல்‌ நன்மாவுடைத்து ஆயர்‌ ஆநிரைக்கு அன்று இடர்‌ தீர்ப்பான்‌ கூடிய மாமழை காத்த கூத்தன்‌ என வருகின்றான்‌ சேடுயர்‌ பூம்பொழில்‌ தில்லைச்‌ சித்திரகூடத்து உள்ளானே

1169

பேய்மகள்‌ கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இதுவென்றால்‌ மாநில மாமகள்‌ மாதர்‌ கேள்வன்‌ இவன்‌ என்றும்‌ வண்டூண்‌ பூமகள்‌ நாயகன்‌ என்றும்‌ புலங்கெழு கோவியர்‌ பாடி தேமலர்‌ தூவ வருவான்‌ சித்திரகூடத்து உள்ளானே

1170

பண்டு இவன்‌ வெண்ணெய்‌ உண்டான்‌ என்று ஆய்ச்சியர்‌ கூடி இழிப்ப' எண்‌ திசையோரும்‌ வணங்க இணை மருதூடு நடந்திட்டு அண்டரும்‌ வானத்தவரும்‌ ஆயிர நாமங்களோடு திண்‌ திறல்‌ பாட வருவான்‌ சித்திரகூடத்து உள்ளானே

1171

வளைக்கை நெ௫டங்கண்‌ மடவார்‌ ஆய்ச்சியர்‌ அஞ்சி அழைப்ப தளைத்தவிழ்‌ தாமரைப்‌ பொய்கைத்‌ தண்‌ தடம்‌ புக்கு அண்டர்‌ காண ர்‌ முளைத்த எயிற்றழல்‌ நாகத்து உச்சியில்‌ நின்று அதுவாட திளைத்தமர்‌ செய்து வருவான்‌ சித்திரகூடத்து உள்ளானே

1172

பருவக்‌ கருமுகில்‌ ஒத்து முத்துடை மாகடல்‌ ஒத்து அருவித்‌ திரள்‌ திகழ்கின்ற வாயிரம்‌ பொன்மலை ஒத்து உருவக்‌ கருங்குழல்‌ ஆய்ச்சி திறத்து இனமால்‌ விடை செற்று தெருவில்‌ திளைத்து வருவான்‌ சித்திரகூடத்து உள்ளானே

1173

எய்யச்‌ சிதைந்தது இலங்கை மலங்க வருமழை காப்பான்‌ உய்யப்‌ பருவரை தாங்கி ஆநிரை காத்தான்‌ என்றேத்தி வையத்தெவரும்‌' வணங்க அணங்கெழு மாமலை போலே தெய்வப்‌ புள்‌ ஏறி வருவான்‌ சித்திரகூடத்து உள்ளானே

1174

ஆவர்‌ இவை செய்தறிவார்‌? அஞ்சன மாமலை போலே மேவு சினத்து அடல்‌ வேழம்‌ வீழ முனிந்து அழகாய காவிமலர்‌ நெடூங்கண்ணார்‌ கை தொழ வீதி வருவான்‌ தேவர்‌ வணங்கு தண்‌ தில்லைச்‌ சித்திரகூடத்து உள்ளானே

1175

பொங்கி அமரில்‌ ஒருகால்‌ பொன்‌ பெயரோனை வெருவ அங்கு அவன்‌ ஆகம்‌ அளைந்திட்டு ஆயிரந்தோள்‌ எழுந்தாட பைங்கண்‌ இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய்‌ சிங்க உருவின்‌ வருவான்‌ சித்திரகூடத்து உள்ளானே

1176

கருமுகில்‌ போல்வது ஓர்‌ மேனி கையன ஆழியும்‌ சங்கும்‌ பெருவிறல்‌ வானவர்‌ சூழ ஏழுலகும்‌ தொழுது ஏத்த ர்‌ ஒருமகள்‌ ஆயர்‌ மடந்தை ஒருத்தி நிலமகள்‌ மற்றைத்‌ திருமகளோடும்‌ வருவான்‌ சித்திரகூடத்து உள்ளானே

1177

தேனமர்‌ பூம்பொழில்‌ தில்லைச்‌ சித்திரகூடம்‌ அமர்ந்த வானவர்‌ தங்கள்‌ பிரானை மங்கையர்‌ கோன்‌ மருவார்‌! ம்‌ ஊனமர்‌ வேல்‌ கலிகன்றி ஒண்‌ தமிழ்‌ ஒன்பதோடு ஒன்றும்‌ தான்‌ இவை கற்று வல்லார்‌ மேல்‌ சாரா தீவினை தாமே

அடிவரவு: வாட பேய்‌ பண்டு வளை பருவம்‌ எய்ய ஆவர்‌ பொங்கி கருமுகில்‌ தேனமர்‌ ஒருகுறள்‌