Skip to the text
பெரிய திருமொழி

4-2. கம்பமா

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

கடலை அணை கட்டி இலங்கை சென்று, இராவணனின் பத்து முடிகளையும் அம்பால் அறுத்து, அரசை விபீடணனுக்கு அளித்த வரலாற்றைப் பாடும் பதிகம். வென்ற பின் அரசைத் தானே கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்ததையே ஆழ்வார் சிறப்பித்துச் சொல்கிறார். வெற்றியை அளப்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு நுட்பமான குறிப்பு இது.

பெரிய திருமொழி 4-2 - கம்பமா (திருநாங்கூர்‌ திருப்பதி 11 : 5. திருவண்புருடோத்தமம்‌)

1258

கம்ப மாகடல்‌ அடைத்து இலங்கைக்கு மன்‌ கதிர்‌ முடி அவை பத்தும்‌ அம்பினால்‌ அறுத்து அரசு அவன்‌ தம்பிக்கு அளித்தவன்‌ உறை கோயில்‌ செம்பலாநிரை செண்பகம்‌ மாதவி சூதகம்‌ வாழைகள்‌ சூழ்‌ வம்புலாம்‌ கமுகோங்கிய நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1259

பல்லவம்‌ திகழ்‌ பூங்கடம்பு ஏறி அக்காளியன்‌ பணவரங்கில்‌ ஒல்லை வந்துறப்‌ பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்‌ கோன்‌ உறை - கோயில்‌ ர்‌ நல்ல வெந்தழல்‌ மூன்று நால்வேதம்‌ ஐவேள்வியோடு ஆறங்கம்‌ வல்ல அந்தணர்‌ மல்கிய நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1260

அண்டரானவர்‌ வானவர்‌ கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்‌ உண்டு கோநிரை மேய்த்து அவை காத்தவன்‌ உகந்து இனிது உறை - கோயில்‌ ர்‌ கொண்டலார்‌ முழவில்‌ குளிர்வார்‌ பொழில்‌ குல மயில்‌ நடமாட வண்டு தான்‌ இசை பாயுடு நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1261

பருங்கை யானையின்‌ கொம்பினைப்‌ பறித்து அதன்‌ பாகனைச்‌ சாமிப்‌ புக்கு ஒறுங்க மல்லரைக்‌ கொன்று பின்‌ கஞ்சனை உதைத்தவன்‌ உறை கோயில்‌ கரும்பினூடு உயர்‌ சாலிகள்‌ விளை தரு கழனியில்‌ மலி வாவி மருங்கெலாம்‌ பொழிலோங்கிய நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1262

சாடு போய்‌ விழத்‌ தாள்‌ நிமிர்த்து ஈசன்‌ தன்‌ படையொடும்‌ கிளையோடும்‌ ஓட வாணனை ஆயிரந்தோள்களும்‌ துணித்தவன்‌ உறை கோயில்‌ ஆடுவான்‌ கொடி அகல்‌ விசும்பு அணவிப்‌ போய்ப்‌ பகலவன்‌ ஒளி - மறைக்கும்‌ மாட மாளிகை சூழ்‌ தரு நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1263

அங்கையால்‌ அடி மூன்று நீர்‌ ஏற்று அயன்‌ அலர்‌ கொடு தொழுது ஏத்த கங்கை போதரக்‌ கால்‌ நிமிர்த்து அருளிய கண்ணன்‌ வந்துறை கோயில்‌ கொங்கை கோங்கவை காட்ட வாய்‌ குழுதங்கள்‌ காட்ட மாபதுமங்கள்‌ மங்கைமார்‌ முகம்‌ காட்டிடு நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1264

உளைய ஒண்திறல்‌ பொன்பெயரோன்‌ தனது உரம்‌ பிளந்து உதிரத்தை அளையும்‌ வெஞ்சினத்து அரிபரி கீறிய அப்பன்‌ வந்துறை கோயில்‌ இளைய மங்கையர்‌ இணையடிச்‌ சிலம்பினோடு எழில்கொள்‌ - ! வந்துற ? கரும்பினோடு பந்தடிப்போர்‌ கை வளையின்‌ இன்றொலி மல்கிய நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1265

வாளையார்‌ தடங்கண்‌ உமை பங்கன்‌ வன்‌ சாபம்‌ மற்றது நீங்க முளையார்‌ சிரத்து ஐயம்‌ முன்‌ அளித்த எம்‌ முகில்‌ வண்ணன்‌ உறை - கோயில்‌ ர்‌ பாளை வான்கழுகூடு உயர்‌ தெங்கின்‌ வன்பழம்‌ விழ வெருவிப்‌ போய்‌ வாளை பாய்‌ தடம்‌ சூழ்‌ தரு நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1266

இந்துவார்‌ சடை ஈசனைப்‌ பயந்த நான்முகனை தன்‌ எழிலாரும்‌ உந்தி மாமலர்‌ மீமிசைப்‌ படைத்தவன்‌ உகந்து இனிதுறை கோயில்‌ குந்தி வாழையின்‌ கொழுங்களி நுகர்ந்து தன்‌ குருளையைத்‌ தழுவிப்‌ போய்‌ மந்தி மாம்பணை மேல்‌ வைகு நாங்கூர்‌ வண்புருடோத்தமமே

1267

மண்ணுளார்‌ புகழ்‌ வேதியர்‌ நாங்கூர்‌ வண்புருடோத்தமத்துள்‌ அண்ணல்‌ சேவடிக்‌ கீழ்‌ அடைந்து உய்ந்தவன்‌ ஆலிமன்‌ அருள்மாரி பண்ணுளார்‌ தரப்‌ பாடிய பாடல்‌ இப்பத்தும்‌ வல்லார்‌ உலகில்‌ எண்ணிலாத பேரின்பம்‌ உற்று இமையவரோடும்‌ கூடூவரே

அடிவரவு: கம்பம்‌ பல்லவம்‌ அண்டர்‌ பருங்கை சாடு அங்கையால்‌ உளைய வாளை இந்து மண்ணுளார்‌ பேரணிந்து