தூம்புடைப் பனைக்கை! வேழம் துயர் கெடுத்தருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடூமழை காத்த எந்தை இ பூம்புனல் பொன்னி முற்றும்! புகுந்து பொன் வரண்ட எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
4-5. தூம்புடை
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
துதிக்கையுடைய யானையின் துயரைக் கெடுத்தருளியதையும், குன்றத்தை ஏந்திக் கடுமழையிலிருந்து காத்ததையும் இணைத்துப் பாடும் பதிகம். ஒரு விலங்கின் அழுகைக்கும் ஓர் ஊரின் அச்சத்திற்கும் அவன் ஒரே வேகத்தில் விடையளிக்கிறான். உதவி கேட்பவரின் அளவைப் பார்த்து அவன் தன் வருகையை நிறுத்துவதில்லை.
பெரிய திருமொழி 4-5 - தூம்புடை (திருநாங்கூர் திருப்பதி 11 : 8. திருமணிக்கூடம்)
கவ்வை வாளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து இலங்கை வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துரந்த எந்தை கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
மாத்தொழில் மடங்கச் செற்று மறுதிற நடந்து வன்தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை நாத்தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண்கைத் தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
தாங்கரும் சினத்துவன் தாள் தடக்கைமா மருப்பு வாங்கி பூன்குருந்து ஒசித்துப் புள்வாய் பிளந்து எருதடர்த்த எந்தை மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலும் ஆய எந்தை ஒண்திறல் தென்னனோட வடவர சோட்டம் கண்ட திண்திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை மன்றவும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய செங்கயல் உகளும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை "' முற்றம் மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திருமணிக்கூடத்தானை மங்கையர் தலைவன் வண்தார் கலியன் வாயொலிகள் வல்லார் பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகாண்டு பின்னும் வெங்கதிர்ப் பரிதி வட்டத்தூடு போய் விளங்குவாரே
அடிவரவு: தூம்பு கவ்வை மாத்தொழில் தாங்கரும் கருமகள் கெண்டை குன்றம் சங்கை பாவம் திங்கள் தாவளந்து