Skip to the text
பெரிய திருமொழி

5-2. தாந்தம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

தம் பெருமை அறியாதவர்களுக்காகத் தூது சென்ற வேந்தர்க்கு வேந்தனை நினைவுகூரும் பதிகம். அரசர்க்கெல்லாம் அரசனாக இருந்தும், பாண்டவர்க்காகத் தூதுவனாகச் சென்ற தாழ்ச்சியை ஆழ்வார் வியந்து சொல்கிறார். பெருமை என்பது இறங்கி வருவதில்தான் தெரிகிறது என்பதே இதன் கருத்து.

பெரிய திருமொழி 5-2 - தாந்தம்‌ (திருக்கூடலூர்‌)

1358

தாம்‌ தம்‌ பெருமை அறியார்‌ தூது வேந்தர்க்காய வேந்தர்‌ ஊர்‌ போல்‌ ர்‌ காந்தள்‌ விரல்‌ மென்கலை நன்மடவார்‌ கூந்தல்‌ கமழும்‌ கூடலூரே

1359

செறுந்திண்‌ திமில்‌ ஏறுடைய பின்னை பெறுந்‌ தண்கோலம்‌ பெற்றார்‌ ஊர்‌ போல்‌ !! தானே நறுந்‌ தண்‌ தீன்‌ தேன்‌ உண்ட வண்டு குறிஞ்சி பாடும்‌ கூடலூரே

1360

பிள்ளை உருவாய்த்‌ தயிர்‌ உண்டு அடியேன்‌ உள்ளம்‌ புகுந்த ஒருவர்‌ ஊர்‌ போல்‌ கள்ள நாரை வயலுள்‌ கயல்‌ மீன்‌ கொள்ளை கொள்ளும்‌ கூடலூரே

1361

கூற்றேர்‌ உருவின்‌ குறளாய்‌ நிலம்‌ நீர்‌ ஏற்றான்‌ எந்தை பெருமான்‌ ஊர்‌ போல்‌ ர சேற்றேர்‌ உழவர்‌ கோதைப்‌ போதூண்‌ கோல்‌ தேன்‌ முரலும்‌ கூடலூரே

1362

தொண்டர்‌ பரவச்‌ சுடர்‌ சென்று அணவ அண்டத்து அமரும்‌ அடிகள்‌ ஊர்‌ போல்‌ ர்‌ வண்டல்‌ அலையுள்‌ கெண்டை மிளிர கொண்டல்‌ அதிரும்‌ கூடலூரே

1363

தக்கன்‌ வேள்வி தகர்த்த தலைவன்‌ துக்கம்‌ துடைத்த துணைவர்‌ ஊர்‌ போல்‌ ர எக்கலிடு நுண்மணல்‌ மேல்‌ எங்கும்‌ கொக்கின்‌ பழம்‌ வீழ்‌ கூடலூரே

1364

கருந்தண்‌ கடலும்‌ மலையும்‌ உலகும்‌ அருந்தும்‌ அடிகள்‌ அமரும்‌ ஊர்‌ போல்‌ ர்‌ பெருந்‌ தண்முல்லைப்‌ பிள்ளை ஓடி குருந்தம்‌ தழுவும்‌ கூடலூரே

1365

கலைவாழ்‌ பிணையோடு அணையும்‌ திருநீர்‌ மலை வாழ்‌ எந்தை மருவும்‌ ஊர்‌ போல்‌ இலை தாழ்‌ தெங்கின்‌ மேல்‌ நின்று இளநீர்க்‌ குலை தாழ்‌ கிடங்கின்‌ கூடலூரே

1366

பெருகு காதல்‌ அடியேன்‌ உள்ளம்‌ உருகப்‌ புகுந்த ஒருவர்‌ ஊர்‌ போல்‌ அருகு கைதை மலர கெண்டை குருகென்று அஞ்சும்‌ கூடலூரே

1367

காவிப்‌ பெருநீர்‌ வண்ணன்‌ கண்ணன்‌ மேவித்‌ திகழும்‌ கூடலூர்‌ மேல்‌ கோவைத்‌ தமிழால்‌ கலியன்‌ சொன்ன பாவைப்‌ பாடப்‌ பாவம்‌ போமே

அடிவரவு: தாம்‌ செறும்‌ பிள்ளை கூற்றேர்‌ தொண்டர்‌ தக்கன்‌ கருந்தண்‌ கலை பெருகு காவி வென்றி