திருவாய்மொழி 2-5 அந்தாமத்தன்பு
2-5. அந்தாமத்தன்பு
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான்" — அழகிய மாலை போன்ற அன்பு செய்து என் உயிரோடு கலந்தவனைப் பாடும் பதிகம். சங்கும் ஆழியும் நூலும் ஏந்திய அவனுடைய வடிவம் தன்னுள்ளேயே இருப்பதைச் சொல்கிறார். தேடல் முடிந்து, கலப்பு தொடங்கும் இடம் இது.
அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாழ்முடி' சங்கு ஆழிநூல் ஆரமுள செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திருவுடம்பே
திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம் திருவிடமே மார்பம் அயனிடமே கொப்பூழ் ர் ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ! ஒருவிடம் ஒன்றின்றி என்னுள் கலந்தானுக்கே
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே
எப்பொருளும் தானாய் மரதகக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழியூழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே
ஆராவமுதமாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேரார நீள்முடி நாண் பின்னும் இழை பலவே
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் ர் பலபல கண்டுூண்டு கேட்டூற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ!
பாம்பணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் காம்பணை தோள் பின்னைக்கா ஏறுடனேழ் செற்றதுவும் தேம்பணைய சோலை மராமரமேழ் எய்ததுவும் பூம்பிணைய தண்துழாய்ப் பொன்முடி அம்போரேறே
பொன்முடி அம்போரேற்றை எம்மானை நால்தடந்தோள் தன்முடிவொன்றில்லாத தண்துழாய் மாலையனை என்முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே
சொல்லீர் என்னம்மானை என்னாவியாவி தனை எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை நல்ல அமுதம்! பெறற்கரிய வீடுமாய் அல்லிமலர் விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன் பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம் கோணை பெரிதுடைத்து எம்மானைக் கூறுதலே
கூறுதல் ஒன்றாராக் குடக்கூத்த அம்மானை கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன் கூறின அந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும் கூறுதல் வல்லாருளரேல் கூடூவர் வைகுந்தமே