Skip to the text
பெருமாள் திருமொழி

10. அங்கணெடு மதிள்

குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

இராமாயணக் கதையை ஒரு பதிகத்திற்குள் சுருக்கிச் சொல்லும் நிறைவுப் பகுதி. அயோத்தி முதல் இலங்கை வரை — பிறப்பு, வனவாசம், சீதை பிரிவு, போர், வெற்றி — என வரிசையாக நினைவுகூரப்படுகிறது. திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானையே இக்கதையின் நாயகனாக ஆழ்வார் காட்டுகிறார். பெருமாள் திருமொழி இவ்வாறு இராமனிடம் வந்து நிறைவுறுகிறது.

பெருமாள்‌ திருமொழி - 10 அங்கணெடு மதிள்‌ (ஞாீராமாயண கதைச்‌ சுருக்கம்‌ - திருச்சித்ரகூடம்‌)

741

அங்கணெடு மதிள்‌ புடை சூழ்‌ அயோத்தி என்னும்‌ அணிநகரத்துலகனைத்தும்‌ விளக்கும்‌ சோதி வெங்கதிரோன்‌ குலத்துக்கோர்‌ விளக்காய்த்‌ தோன்றி விண்‌ முழுதும்‌ உயக்‌ கொண்ட வீரன்‌ தன்னை செங்கணெடும்‌ கருமுகிலை இராமன்‌ தன்னைத்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ எங்கள்‌ தனி முதல்வனை எம்பெருமான்‌ தன்னை என்று கொலோ கண்குளிரக்‌ காணும்‌ நாளே

742

வந்தெதிர்ந்த தாடகை தன்‌ உரத்தைக்‌ கீறி வரு குருதி பொழிதர வன்கணை ஒன்றேவி மந்திரம்‌ கொள்‌ மறை முனிவன்‌ வேள்வி காத்து வல்லரக்கர்‌ உயிர்‌ உண்ட மைந்தன்‌ காண்மின்‌ செந்தளிர்வாய்‌ மலர்‌ நகை சேர்‌ செழுந்தண்‌ சோலைத்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ அந்தணர்களொரு மூவாயிரவர்‌ ஏத்த அணிமணி ஆசனத்திருந்த அம்மான்‌ தானே

743

செவ்வரி நற்கரு நெ௫டூங்கண்‌ சீதைக்காகிச்‌ சினவிடையோன்‌ சிலை இறுத்து மழுவாள்‌ ஏந்தி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு வேல்வேந்தர்‌ பகை தடிந்த வீரன்‌ தன்னை தெவ்வரஞ்சு நெடும்‌ புரிசை உயர்ந்த பாங்கர்த்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ எவ்வரி வெஞ்சிலை தடக்கை இராமன்‌ தன்னை இறைஞ்சுவார்‌ இணையடியே இறைஞ்சினேனே

744

தொத்தலர்‌ பூஞ்சுரிகுழல்‌ கைகேசி சொல்லால்‌ தொன்னகரம்‌ துறந்து துறைக்‌ கங்கை தன்னை பத்தியுடைக்‌ குகன்‌ கடத்த வனம்‌ போய்ப்‌ புக்குப்‌ பரதனுக்குப்‌ பாதுகமும்‌ அரசும்‌ ஈந்து சித்திரகூடத்திருந்தான்‌ தன்னை இன்று தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ எத்தனையும்‌ கண்குளிரக்‌ காணப்‌ பெற்ற இருநிலத்தார்க்கு இமையவர்‌ நேரொவ்வார்‌ தாமே (க)

745

வலிவணக்கு வரை நெடூந்தோள்‌ விராதைக்‌ கொன்று வண்தமிழ்‌ மாமுனி கொடுத்த வரிவில்‌ வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன்‌ தன்‌ உயிரை வாங்கி சிலை வணக்கி மான்‌ மறிய எய்தான்‌ தன்னைத்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ தலை வணக்கிக்‌ கைகூப்பி ஏத்த வல்லார்‌ திரிதலால்‌ தவமுடைத்துத்‌ தரணி தானே

746

தனமருவு வைதேகி பிரியலுற்றுத்‌ தளர்வெய்திச்‌ சடாயுவை வைகுந்தத்தேற்றி வனமருவு கவியரசன்‌ காதல்‌ கொண்டு வாலியைக்‌ கொன்று இலங்கை நகர்‌ அரக்கர்‌ கோமான்‌ சினம்‌ அடங்க மாருதியால்‌ சுடூவித்தானைத்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ இனிதமர்ந்த அம்மானை இராமன்‌ தன்னை ஏத்துவார்‌ இணையடியே ஏத்தினேனே

747

குரை கடலை அடலம்பால்‌ மறுக எய்து குலைகட்டி மறு கரையை அதனால்‌ ஏறி எரிநெடுவேல்‌ அரக்கரொடும்‌ இலங்கை வேந்தன்‌ இன்னுயிர்‌ கொண்டு அவன்‌ தம்பிக்கு அரசும்‌ ஈந்து திருமகளோடு இனிதமர்ந்த செல்வன்‌ தன்னைத்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ அரசமர்ந்தான்‌ அடி சூடும்‌ அரசை அல்லால்‌ அரசாக எண்ணேன்‌ மற்றரசு தானே

748

அம்பொனெடு மணிமாட அயோத்தி எய்தி அரசெய்தி அகத்தியன்‌ வாய்த்தான்‌ முன்‌ கொன்றான்‌ தன்‌ பெருந்தொல்‌ கதை கேட்டு மிதிலைச்‌ செல்வி உலகுய்யத்‌ திருவயிறு வாய்த்த மக்கள்‌ செம்பவளத்‌ திரள்‌ வாய்த்‌ தன்‌ சரிதை கேட்டான்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ எம்பெருமான்‌ தன்‌ சரிதை செவியால்‌ கண்ணால்‌ பருகுவோம்‌ இன்னமுதம்‌ மதியோமன்றே

749

செறிதவச்‌ சம்புகன்‌ தன்னைச்‌ சென்று கொன்று செழு மறையோன்‌ உயிர்‌ மீட்டுத்‌ தவத்தோன்‌ ஈந்த நிறை மணிப்பூண்‌ அணியும்‌ கொண்டு இலவணன்‌ தன்னைத்‌ தம்பியால்‌ வானேற்றி முனிவன்‌ வேண்ட திறல்‌ விளங்கும்‌ இலக்குமனைப்‌ பிரிந்தான்‌ தன்னைத்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ உறைவானை மறவாத உள்ளம்‌ தன்னை உடையோம்‌ மற்றுறு துயரம்‌ அடையோமன்றே

750

அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி அடலரவப்‌ பகையேறி அசுரர்‌ தம்மை வென்று இலங்கு மணி நெடும்‌ தோள்‌ நான்கும்‌ தோன்ற விண்‌ முழுதும்‌ எதிர்‌ வரத்‌ தன்‌ தாமமேவி சென்றினிது வீற்றிருந்த அம்மான்‌ தன்னைத்‌ தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ என்றும்‌ நின்றான்‌ அவனிவன்‌ என்றேத்தி நாளும்‌ இறைஞ்சுமினோ எப்பொழுதும்‌ தொண்டீர்‌ நீரே

751

தில்லை நகர்த்‌ திருச்சித்ரகூடம்‌ தன்னுள்‌ திறல்‌ விளங்கு மாருதியோடு அமர்ந்தான்‌ தன்னை எல்லையில்‌ சீர்த்‌ தயரதன்‌ தன்‌ மகனாய்த்‌ தோன்றிற்று அது முதலாத்‌ தன்‌ உலகம்‌ புக்கதீறா கொல்லியலும்‌ படைத்தானைக்‌ கொற்றவொள்வாள்‌ கோழியர்கோன்‌ குடைக்‌ குலசேகரன்‌ சொற்‌ செய்த நல்லியலின்‌ தமிழ்‌ மாலை பத்தும்‌ வல்லார்‌ நலம்‌ திகழ்‌ நாரணனடிக்‌ கீழ்‌ நண்ணுவாரே குலசேகரப்‌ பெருமாள்‌ திருவடிகளே சரணம்‌